நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை உறுதிப்படுத்தி வர்தமானி வெளியானது!

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் எட்டாவது நாடாளுமன்றம் நள்ளிரவு முதல் கலைக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி கையொப்பத்துடனான உத்தியோகப்பூர்வ வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரசியல் யாப்பின் 33 ஆவது உறுப்புரை 2(இ) உப உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்திற்கு அமைவாக இன்று (09) நள்ளிரவு முதல் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படுகின்றது.

இதேவேளை 1981ஆம் ஆண்டு தேர்தல் சட்டத்தின் 10வது சரத்திலும், அரசமைப்பின் 70வது சரத்திலும் நாடாளுமன்றம் கலைக்கப்படும்போது, வேட்புமனு தாக்கல் திகதி, தேர்தல் திகதி என்பவற்றை குறிப்பிட வேண்டும் என்பதற்கிணங்க, அடுத்து தேர்தல் மற்றும் வேட்புமனு தாக்கல் திகதி வெளியிடப்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல் எதிர்வரும் 19ம் திகதியிலிருந்து எதிர்வரும் 26ம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கெள்ளப்படும். 2019 ஜனவரஜ 05 சனிக்கிழமை நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறும்.

அத்துடன் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதி அன்று நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்படவிருப்பதாகவும் ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக ஜனாதிபதியின் செயலாளரினால் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here