உயர்நீதிமன்றின் அனுமதியின்றி தேர்தல் நடத்த முடியாது: தேர்தல்கள் ஆணைக்குழு

இலங்கை உயர்நீதிமன்றின் அனுமதியின்றி தேர்தலை நடத்த முடியாதென, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இந்த தகவலை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை நாடாளுமன்றம் இன்று கலைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் வர்தமானி அறிவித்தல் இன்னும் சிறிது நேரத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அடுத்த கட்டமாக எதிர்வரும் ஜனவரியில் தேர்தல் இடம்பெற வாய்ப்புள்ளது என்னும் தகவல்கள் பரவிய வண்ணம் உள்ளது.

எனினும், ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்கட்சிகள் ஜனாதிபதியின் செயலை கண்டித்து வரும் நிலையில்,குறித்த செயல் அரசியலமைப்பிற்கு முரணானது என்ற கருத்துக்களும் நிலவுகின்றமையினாலும், ரணில் தான் நீதிமன்றில் வழக்கு தொடரப்போவதாக கூறியுள்ளமையினாலும், உயர்நீதிமன்றின் அனுமதியின்றி தேர்தலை நடத்த முடியாதென தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here