ரசிகர்கள் நலனை கருத்தில் கொண்டு படத்தில் சில காட்சிகள் நீக்கம்: சர்கார் படக்குழு!

ஆளும் அரசு பிரயோகித்த அழுத்தம் காரணமாகவின்றி, அவர்களால் தமிழக திரையரங்குகளுக்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு படத்தில் சில காட்சிகளை நீக்கியுள்ளதாக சர்கார் படக்குழு தெரிவித்துள்ளது.

திரையரங்க உரிமையாளர்கள் விடுத்த கோரிக்கைகளை ஏற்றே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக திரைப்பட தயாரிப்புக்குழு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நடிகர் விஜய் நடித்து திரையரங்குகளில் பிரமாண்டமாக ஓடிக்கொண்டிருக்கும் சர்கார் திரைப்படத்தில் சில காட்சிகள்,நீக்கப்பட வேண்டும் என்றும், அவை மத்திய அரசை இழிவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளதாகவும் கூறி, பா.ஜ.க. சார்பில் திரையரங்குகளி் முன் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.

இதன் விளைவாக பல திரையரங்குகள் உடைக்கப்பட்டதோடு, பார்வையாளர்களும் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், குறித்த அரசியல் செய்றபாட்டினால் பொதுமக்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு மட்டும் படத்தின் சில காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here