மடுகந்த பகுதியில் இனந்தெரியாத ஆணின் சடலம் கண்டெடுப்பு!

வவுனியா, மடுகந்த பகுதியில் இனந்தெரியாத ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மடுகந்த, மயிலங்குளம் பகுதியிலுள்ள குளத்தில் உருக்குலைந்த நிலையில் காணப்பட்ட சடலமொன்றை, நேற்று அவ்வழியாக சென்ற இளைஞன் ஒருவர்  கண்டு பிரதேச மக்களிடம் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து  மடுகந்த பொலிஸாருக்கு பொதுமக்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

பின்னர் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார்,  சடலத்தினை பார்வையிட்டதுடன்,  கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் குறித்த ஆண் உயிரிழந்திருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் உயிரிழந்தவர் தொடர்பாக தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை எனவும் 45 தொடக்கம் 55 வயதிற்குட்பட்டவராக இருக்கலாம் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை மடுகந்த பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here