நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறது!

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் கையொப்பத்துடன் அரசாங்க தகவல் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று (09) நள்ளிரவு முதல் நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறது.

முன்னைய செய்தி

நாடாளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானியில் கையெழுத்திட்டார் மைத்திரி?

நாடாளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானியில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார் என தற்போதைய அரசின் குரல் தரவல்ல அமைச்சர் ஒருவர் சற்று முன்னர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.

நாடாளுமன்றம் கலைவது குறித்து வெளியாகும் செய்திகள் குறித்து, அரசாங்கத்தின் குரல்தரவல்ல அமைச்சர் ஒருவரை தமிழ்பக்கம் சற்று முன்னர் தொடர்பு கொண்டு வினவியது.

நாளை காலைவரை இது குறித்த பதிலுக்கு காத்திருக்குமாறு கூறிய அமைச்சர், உத்தியோகப்பற்றற்ற விதத்தில், நாடாளுமன்றம் கலைவது குறித்த தகவலை வெளியிட்டார். இது குறித்த வர்த்தமானியில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளதாகவும், வரும் ஜனவரியில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here