ரவி கருணாநாயக்கவின் மகளை ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மகளை எதிர்வரும் திகங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு பிரதம நீதியரசர் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

சி.ஐ.டி.யால் தாக்கல் செய்யப்பட்ட ஒரு தீர்மானத்தையும், கருணாநாயக்க மகள் சமர்ப்பித்த மற்றொறு தீர்மானத்தையும் கருத்தில் கொண்டே இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பினைமுறி மோசடி தொடர்பாக விசாரணைகள் தொடர்பாக தனது அறிக்கையை பதிவு செய்யுமாறு, சி.ஐ.டி.யிடம் தெரிவிக்க வேண்டும் என ஒநேலா கருணாநாயக்க கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை 8.50 முதல் 9.05 வரை வாக்குமூலத்தை பதிவு செய்யுமாறு, சி.ஐ.டி.யினர் மன்றில் தெரிவித்திருந்த நிலையில், நீதவான் இந்த உத்தராவை பிறப்பித்துள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here