விரைவு ரயிலில் கொள்ளை: வழக்கில் கொள்ளையர்கள் வழங்கிய அதிர்ச்சி வாக்கு மூலம்!

சென்னை – சேலம் விரைவு ரயிலில் கொள்ளையடிக்கப்பட்ட ஐந்து கோடியே எழுபத்தெட்டு லட்சம் ரூபா பணத்தை செலவழித்து விட்டதாக, கொள்ளை கும்பல் வாக்குமூலம் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சென்னையிலிருந்து சேலத்திற்கு சென்ற ரயிலில் மேற்கூரையில் துளையிட்டு குறித்த பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பான ஆதரங்கள் கிடைக்காமல் அதிகாரிகள் திணறி வந்தனர்.

இரண்டு ஆண்டுகள் விசாரணையை அடுத்து இஸ்ரோ உதவியுடன் மத்திய பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பேரை, சி.பி.சி.ஐ.டி. பொலிஸார் கைது செய்தனர்.

இது தொடர்பான விசாரணையில் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்னரே, மொத்த பணத்தையும் பங்கிட்டு செலவு செய்து விட்டதாக கொள்ளையர்கள் வாக்குமூலம் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனிம் கொள்ளையர்கள் குறித்த பணத்தை தங்கமாகவே அல்லது வேறு வழியிலோ மாற்றி பதுக்கி வைத்துள்ளனரா என்னும் வகையில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here