மு.க.ஸ்டாலின்-சந்திரபாபுநாயுடு சந்திப்பு தொடர்பில் தமிழிசை!

எதிர்கட்சிகள் பழைய தோசையை பிய்த்து பிய்த்து சாப்பிடுகிறார்கள் என, மு.க.ஸ்டாலின் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் சந்திப்பு குறித்து தமிழிசை விமர்சித்துள்ளார்.

இன்று இரு தலைவர்களுக்குமிடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ள நிலையில், சற்று முன்னர் தமிழிசை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் மேற்படி விமர்சித்துள்ளார்.

அதில் மேலும் கூறியுள்ள அவர்,

“சந்திரபாபுநாயுடு,ஸ்டாலினைச்சந்தித்துவிட்டார்,அதற்குமுன்னால்தேவகவுடாவைச்சந்தித்துவிட்டார்,ராகுலைச்சந்தித்துவிட்டார்..மிகப்பெரியகூட்டணியை அமைத்துவிட்டார்என்கின்றனர்.

எந்த புதுதோசையையும் அவர்கள் சுடவில்லை. ஏற்கனவே எதிரணியாக இருக்கும் ஒருதோசையை பிய்த்து பிய்த்து சாப்பிடுகிறார்கள் அவ்வளவுதான்” எனக் கூறியுள்ளார்.

அடுத்த நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு எதிர்கட்சிகள் பா.ஜ.க.வை வீழ்த்தும் முனைப்புடன் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது புதுக்கட்சிகள் பல உருப்பெற்றுள்ள  போதும் அவை தனித்தனியாகவே உள்ளமையும், பழைய கட்சிகளே உ்றாக உள்ளமையும் அவதானிக்கத்தக்கது.

எனினும் சில புதிய கட்சிகள் தமது முடிவை தேர்தல் காலத்தில் தான் தெரிவிக்க முடியும் என கூறிவருகின்றன.

இந்நிலையில், சந்திரபாபுநாயுடு இணைத்துக்கொள்ள விரும்பும் கட்சிகள் பழமையானதே என்றும் அவர்கள் ஒன்று சேருவதால் தமக்கு ஏதும் ஆவப்போவதில்லை என்பதை போன்றும் தமிழிசை மேற்படி பதிவை இட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here