சதீஸ்கரில் நாம் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும்: ராகுல்காந்தி

சதீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பத்து நாட்களுக்குள் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

சதீஸ்கர் மாநில முதல்வர் ரமன்சிங்கின் சொந்த தொகுதியான, ராஜ்நத்கானில் இடம்பெற்ற பரப்புரை கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல்காந்தி ஜி.எஸ்.டி.குறித்து விமர்சித்தார்.

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு பொய்யான வாக்குறுதிகளை அளித்ததை போல தாங்களும் வாக்குறுதிகளை அள்ளி வழங்கவில்லை எனக் கூறிய ராகுல்காந்தி,  பஞ்சாப் மற்றும் கர்நாடகாவில் விவசாய கடனை தாம் தள்ளுபடி செய்துள்ளதாக கூறினார்.

சதீஸ்கர் சட்டப்பேரவைக்கு எதிர்வரும் 12 மற்றும் 20 ஆகிய திகதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தேர்தல் பிரசாரங்கள் பலமடைந்துள்ளன.

இவ்வாறான நிலையில், இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி மேற்படி உரையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here