பாதுகாப்பு படைகளின் பிரதானியை கைது செய்ய மீண்டும் உத்தரவு!

பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜயகுணரட்னவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் ரங்க திசாநாயக்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ரவீந்திர விஜயகுணரட்ன மீதான குற்றச்சாட்டுக்கு அமைய அவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தும் முழு அதிகாரமும் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வாவுக்கு இருப்பதாக நீதவானின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவை செயற்படுத்த தவறினால் அவருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் 216 மற்றும் 185ம் சரத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதாக நீதவான் ரங்க திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

2008 ஆம் ஆண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமற் போன சம்பவம் தொடர்பில் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி எனும் நேவி சம்பத் நீதிமன்றில் ஆஜராகாமல் இருப்பதற்கு உதவி ஒத்தாசை புரிந்ததாக பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜயகுணரட்ன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here