ஹக்கீமின் அமைச்சு ஹிஸ்புல்லாஹிற்கு!

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இதேவேளை, முன்னைய அரசில் ரவூப் ஹக்கீம் வகித்த நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சை, கிழக்கின் இன்னொரு அரசியல்வாதியான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடம் ஜனாதிபதி வழங்கியுள்ளார்.

புதிய அரசியல் ரவூப் ஹக்கீம் இணையப்போவதில்லையென்பது உறுதியான பின்னரே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதேவேளை, கடந்த அரசில் ரிசாட் பதியுதீன் வகித்த கைத்தொழில், வாணிப அமைச்சும் சுதந்திரக்கட்சி எம்.பியொருவருவருக்கு வழங்கப்படுமென தெரிகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here