குடியிருப்பாளர்களை அச்சுறுத்திய முதலை பிடிக்கப்பட்டது!

கிளிநொச்சி கனகாம்பிகை குளத்தை அண்டிய பகுதிகளிலுள்ள குடியிருப்பாளர்களை அச்சுறுத்தி வந்த முதலையொன்று இன்று பொதுமக்களால் பிடிக்கப்பட்டு வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு குடியிருப்புக்களிற்குள் புகுந்து கோழிகளை பிடித்து உண்டதாகவும், இதையடுத்து பொதுமக்கள் திரண்டு முதலையை பிடித்ததாகவும் பிரதேசவாசிகள் குறிப்பிடுகின்றனர்.

இதையடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு விடயம் அறிவிக்கப்பட்டது. வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் முதலையை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here