ஹேரத்தின் கடைசி டெஸ்டிலும் இலங்கை படு தோல்வி!

காலியில் நடந்த இங்கிலாந்துடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் 211 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை படுதோல்வியடைந்தது. நான்கு நாள்களில் முடிந்த இந்த டெஸ்டின் முதல்நாள், முதல் செசனில் மாத்திரம் இலங்கையின் கை சற்று ஓங்கியிருந்ததை போல தென்பட்டதே தவிர, மற்றும்படி முழுக்க முழுக்க இங்கிலாந்தின் ஆதிக்கமே ஒரு தலைப்பட்சமாக இருந்தது.

தனது கடைசி டெஸ்டில் ஆடிய ரங்கன ஹேரத், பிரமாண்டமான தோல்வியுடன் விடைபெற்றார். ஆனால் இலங்கை வீரர்களிற்கு இது வலித்திருக்காது. காரணம், இப்படியான தோல்விகளும், ஆட்டங்களும் இலங்கைக்கு கடந்த இரண்டு ஆண்டில் சகஜமாகி விட்டது.

இந்த போட்டியில் இலங்கைக்கு ஏதேனும் ஆறுதலென ஏதாவது இருந்திருக்குமெனில், அது இரண்டு இன்னிங்சிலும் அஞ்சலோ மத்யூஸ் அடித்த அரைச்சதம் மட்டுமே. மற்றும்படி, தற்போதைய இலங்கை அணியின் டெஸ்ட் அந்தஸ்தை கேள்விக்குட்படுத்தும் இன்னொரு போட்டியாகவே இதுவும் முடிந்தது.

இன்று காலையில் நாம் கூறியிருந்தபடி, இந்த போட்டியில் வெற்றி பெறுவதை விட சமப்படுத்துவதே இலங்கைக்கு ஆகப்பெரிய சவாலாக இருக்கும் என. காரணம் முதல் இன்னிங்ஸில் வெறும் 68 ஓவர்களையே சந்தித்தது. 203 ஓட்டங்களிற்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இரண்டாவது இன்னிங்சில் 85.1 ஓவர்களில் 250 ஓட்டங்களிற்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. மத்யூஸ் 53 ஓட்டங்களை பெற்றார். மென்டிஸ் 45 ஓட்டங்களை பெற்றார். டில்ருவான் பெரேரா, கௌஷால் சில்வா தலா 30 ஓட்டங்கள். அணித்தலைவர் சந்திமால் வெறும் 1 ஓட்டம்.

மெயின் அலி 4, லீச் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

முன்னதாக, இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 342 ஓட்டங்களை பெற, இலங்கை 203 ஓட்டங்களிற்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 322 என்ற நிலையில் ஆட்டத்தை முடித்தது.

ஆட்டநாயகன், முதல் இன்னிங்ஸ் சத நாயகன் போகஸ்.

ரங்கன ஹேரத்தின் கடைசி டெஸ்ட் தோல்வியுடன் முடிந்தது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here