மு.க.ஸ்டாலினை சந்தித்தார் ஆந்திர முதல்வர்: கூட்டணி சேருமா?

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தி.மு.க. இல்லத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினை, ஆந்திரா முதல்வர் சந்திரபாபுநாயுடு சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பு ஏற்கனவே குறிப்பிட்டதற்கு இணங்க இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

சந்திரபாபு நாயுடு பா.ஜ.க.கூட்டணியிலிருந்து விலகிய பின்னர், பிரதமர் மோடியை சரமாரியாக தாக்கிவருகிறார்.

அத்தோடு எதிர்வரும் தேர்தலில் பா.ஜ.க.விற்கு எதிராக கூட்டணி ஒன்றை திரட்டும் முயற்சியில் தீவிரமாக செயற்பட்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

இதன்படி அடுத்தகட்டமாக இன்று தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஆண்டு தற்போதைய மத்திய அரசின் ஆட்சி காலம் நிறைவுக்கு வரவுள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளது.

இதில் வெற்றிபெறும் நோக்கில் பழமைவாய்ந்த கட்சிகள் மற்றும் புதிய கட்சிகள் என அனைத்தும் பிரசாரங்களை ஆரம்பித்துவிட்டன.

அந்தவகையில், பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பில்ி பல கட்சிகளற் ஒற்றுமையாக உள்ளமை அடுத்த தேர்தலை விறுவிறுப்பாக்கியுள்ளது.

மேலும் இதில் கூட்டணி சேரப்போபவர்கள் யார்? அடுத்த தேர்தலையடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் என்னும் கேள்விகள் இப்போதே வலுப்பெற்றுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here