வந்தாறுமூலை வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டது!

சீரற்ற காலநிலை காரணமாக, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. பல்கலைக்கழக பதில் பதிவாளர் அ.பகிரதன் இன்று (09) இந்த அறிவித்தலை விடுத்தார்.

கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடை மழையினால், மட்டக்களப்பின் பல பகுதிகள் நீரில் மூழகியுள்ளன. பல பகுதிகளின் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் வருகை குறைவாக கணப்படுகிறது.

பல்கலைக்கழக வளாகம் மற்றும் விடுதியில் வெள்ளம் தேங்கி நிற்பதனால் மாணவர்கள் பலவேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மாணவர்களுக்கான பரீட்சைகள் நடைபெற்று வந்த நிலையில், சீரற்ற காலநிலையால், அவர்கள் குறித்த நேரத்துக்கு சமுகமளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

குறித்த காரணங்களின் அடிப்படையில், கிழக்குப் பலக்லைக் கழக வந்தாறுமூலை வளாகத்தின் கல்வி நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here