மரத்தில் ஏறியிருந்து உயிர் தப்பிய குடும்பம்: முல்லைத்தீவில் விமானப்படையினர் மீட்டனர்!

முல்லைத்தீவில் நித்திகை குளம் உடைப்பெடுத்ததால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி காணாமல் போன குடும்பம் மீட்கப்பட்டுள்ளது. நேற்றிரவு விமானப்படை உலங்கு வானூர்தி மூலம் அவர்கள் மீட்கப்பட்டனர்.

முல்லைத்தீவில் பெய்து வரும் அடை மழை காரணமாக, குளங்கள் நிரம்பி உடைப்பெடுக்க ஆரம்பித்துள்ளன.

1983ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கை காரணமாக ஆண்டான்குளம், நித்திகை குளம் பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேறியிருந்தனர். அதன் பின்னர் நித்திகை குளம் பராமரிப்பின்றி இருந்தது. அதன் கீழ் செய்கை செய்யப்பட்டு வந்த 21,000 ஏக்கர் வயல் நிலங்களும் தரிசாகின.

யுத்தத்தின் பின்னர்- 35 வருடங்களின் பின்னர்- பெரு முயற்சி மேற்கொள்ளப்பட்டு அந்த பகுதிகயின் 1,000 ஏக்கர் வயல் நிலமும், குளமும் அண்மையில் விடுவிக்கப்பட்டன. 15 மில்லியன் ரூபா செலவில் நித்திகை குளத்தை வடக்கு விவசாய அமைச்சு சில மாதங்களின் முன்பாக புனரமைத்திருந்தது. எனினும், எதிர்பாராத விதமாக அதிகளவான நீர் வரத்து ஏற்பட்டது. சுமார் 15 அடி நீர் நிறைந்ததை தொடர்ந்து குளம் உடைப்பெடுத்துள்ளது.

வெள்ளம் காரணமாக தொடர்பு துண்டித்த குடும்பத்தை மீட்க கடற்படை, இராணுவத்தின் முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதையடுத்து,  விமானப்படையின் உதவி நாடப்பட்டது. உலங்கு வானூர்தி மூலம் தேடுதல் நடத்தி மரத்தில் ஏறியிருந்த குடும்பத்தை விமானப்படையினர் மீட்டனர்.

இதேவேளை, ஈ.பி.டி.பி அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில், காப்பாற்றப்பட்ட மக்கள், இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு சென்ற டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து நன்றி கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here