கிளிநொச்சி கிராமங்களிலும் வெள்ளம்!

அடை மழை காரணமாக கிளிநொச்சிக் குளங்களின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. சில குளங்கள் வான்பாய ஆரம்பித்துள்ளதால், கிளிநொச்சியின் சில கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இரணைமடுக்குளம் 26 அடியாகவும், அக்கராயன் குளம் 19 அடி 4 அங்குலமாகவும், கல்மடுக் குளம் 23 அடி 4 அங்குலமாகவும், கரியாலை நாகபடுவான் குளம் 4 அடி 01 அங்குலமாகவும், முறிப்புக் குளம் 15 அடி 5 அங்குலமாகவும், பிரமந்தனாறுக் குளம் 11 அடியாகவும், குடமுருட்டிக் குளம் 05அடி 01 அங்குலமாகவும், வன்னேரிக்குளம் 10 அடியாகவும் உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கிளிநொச்சி கனகாம்பிகை குளம் வான்பாய்ந்து வருகின்றமையால் கிளிநாச்சி ஆனந்தபுரம் கிழக்கு, இரத்தினபுரம் ஆகிய பகுதிகளில் மக்கள் குடியிருப்புகளிற்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

குறித்த பகுதியில் வெள்ளத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தொடர்பில் கிளிநாச்சியிலுள்ள 7வது படைப்பிரிவினால் 11 குடும்பங்களை சேர்ந்த 57 பேருக்கான உடனடி உணவுகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் இரணைமடு குளத்தின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 19.8 அங்குலமாக இருந்த நிலையில் இநேற்று வியாழக்கிழமை வெகுவாக நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த பலத்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here