பாடசாலை தண்ணீர் தாங்கியில் நீர் நிரப்புவது யார்?

செங்கலடி சின்னத்தளவாய் கலைமகள் பாலர் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, வழங்கப்பட்ட தண்ணீர் தாங்கியில் நீர் நிரப்பப்படாததால் மாணவர்கள் பெரும் சிரமங்களை சந்திக்கிறார்கள்.

கடந்த மாதம் 12ம் திகதி ஆயிரம் லீற்றர் கொள்ளவுடைய இந்த தண்ணீர் தாங்கி, தன்னார்வலர்களால் வழங்கப்பட்டது. தண்ணீர் தாங்கி வைக்கப்பட்டு, ஒரு மாதமாகியும், அதில் தண்ணீர் நிரப்பப்படவில்லை. செங்கலடி பிரதேசசபையின் அசமந்தம் பலரையும் விசனமடைய வைத்துள்ளது.

குறித்த தண்ணீர் தாங்கியில் நீர் நிரப்பும்படி பாடசாலை நிர்வாகத்தால் இரண்டு முறை செங்கலடி பிரதேசசபைக்கு எழுத்துமூலம் கோரிக்கை விடப்பட்டது. பிரதேசசபை உறுப்பினர்களிடமும் இந்த விவகாரம் நேரில் சொல்லப்பட்டது. தற்போது பிரதியமைச்சராக பதவியேற்றுள்ள வியாழேந்திரனிடம் ஆரம்பத்திலேயே- அவர் அமைச்சராகுவதற்கு முன்னரே- சொல்லப்பட்டது.

எனினும், அந்த பாடசாலையை யாரும் திரும்பியும் பார்க்கவில்லை.

இந்த நிலையிலேயே கிழக்கு அபிவிருத்திக்காக பிரதியமைச்சர் பதவியை ஏற்றுள்ளதாக ச.வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here