இதயரேகைப்படி உங்களுக்கு வாழ்க்கைத்துணை எப்படி அமையும்?

உங்கள் கைகள் கண்ணாடியைப் போன்றவை. கைகளில் உள்ள ரேகைகளை வைத்து ஒருவரின் குணாதிசயங்கள், உடல்நலம், திருமணம் என வாழ்க்கையில் எதிர்கொள்ளும் அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொள்ள முடியும். ஆனால், அதற்கு கைரேகை பற்றி நன்கு கற்று தேர்ந்த கைரேகை நிபுணராக இருப்பது அவசியம். அப்படிப்பட்ட ஒருவரால் மட்டுமே துல்லியமான பலனைக் கணித்து சொல்ல முடியும்.

உங்கள் கையில் உள்ள ஒவ்வொரு ரேகையும் அதிர்ஷ்டம் மற்றும் எதிர்கால கணிப்புகளின் அடிப்படையில் ஒரு தனித்துவமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. எதிர்காலத்தைப் பற்றி ஆழமான ரகசியங்கள் உங்கள் கைரேகையில் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா… இது ஒரு சிலருக்கு ஏற்றுக்கொள்ள சற்று கடினமாக இருந்தாலும், அதுதான் உண்மை.

சரி, விஷயத்திற்கு வருவோம்… மனிதர்களின் கை, கால்களில் இருக்கும் ஒவ்வொரு ரேகைகளிலும் பல அர்த்தங்கள் மறைந்துள்ளது. அதில் அனைவருக்கும் ஒரே மாதிரியான ரேகைகள் இரு கைகளிலும் அமைவதில்லை. அப்படிப் பார்க்கும் போது ஒரு சிலரின் கைகளில் இருக்கும் இதய ரேகைகள் மட்டும் ஒரே அளவில் இருக்க வாய்ப்புகள் உள்ளது.

அவ்வாறு ஒரே மாதிரியாக இருந்தால், அவர்களை விட அதிர்ஷ்டசாலி யாரும் இல்லை என்று தான் சொல்லலாம். ஆனால், இதுபோன்ற இதய ரேகைகள் அனைவரும் ஒரே சமமாக அமைவதில்லை.

இதய ரேகை என்றால் உடனே இதய ஆரோக்கியத்தை குறிப்பது என்று அர்த்தம் அல்ல. அதன் அளவு மற்றும் அமைப்பைக் கொண்டு, ஒருவரது காதல் மற்றும் திருமண வாழ்க்கையைக் குறிப்பதாகும்.

எப்படி பார்ப்பது இந்த இதயரேகை?

கையில் உள்ள முக்கிய ரேகைகளில் ஒன்று தான் இதய ரேகை. இந்த ரேகை சுண்டு விரலின் கீழே ஆரம்பமாகி நடுவிரல் அல்லது ஆள்காட்டி விரலை நோக்கிச் சென்றவாறு இருக்கும். சரி, உங்கள் கையில் இருக்கும் இதய ரேகை என்ன சொல்கிறது எனப் பார்ப்போம்……..

இதய ரேகைகள் ஒரே அளவில் இருந்தால்….என்ன அர்த்தம்

நம்முடைய வலது மற்றும் இடது கைகளை ஒன்றாக வைக்கும் போது நம் கையை இணைக்கும் இதய ரேகைகள் ஒரே மாதிரி சம அளவில் இருந்தால், அவர்களுக்குத் துணையாக வருபவர்கள், மிகுந்த அன்புடனும், நன்கு புரிந்து கொள்பவராகவும், அனுசரித்து நடந்து கொள்பவர்களாகவும் இருப்பார்கள்.

வலது கையின் இதய ரேகை நீண்டு இருந்தால்….

இடது கையை விட வலது கையின் இதய ரேகை நீண்டு இருந்தால், அதாவது மேல்நோக்கியவாறு இருந்தால் அவர்களுக்கு அமையும் துணை மிகவும் நல்லவராக இருப்பார். மேலும் இவர்கள் தன் இதயம் சொல்வதை மட்டுமே செய்வார்கள். இதனால் இவர்கள் மற்றவர்களின் கருத்துக்களின் மீது அக்கறை கொள்ளமாட்டார்கள். இதயக் கோட்டிற்கு கீழ் நோக்கி ரேகைகள் செல்லுமேயானால் வாழ்க்கையில் அவருக்கு குறைவான அதிர்ஷ்டமே இருக்கும் எனக் கூறப்படுகின்றன.

இடது கையின் இதய ரேகை நீண்டு காணப்பட்டால்….

வலது கையை விட இடது கையின் இதய ரேகை உயரமாக நீண்டு இருந்தால் அவர்கள் கொஞ்சம் கோபக்காரர்களாகவும், சுதந்திரமாகவும் இருக்க விரும்புவார்கள். மேலும் இவர்களுக்கு வரும் துணையின் மூலமாக வாழ்க்கை முழுமை அடையும். இவர்கள் எதற்கும் அஞ்ச மாட்டார்கள். மற்றவர்களை எளிதில் தன்வசமாக்கி கொள்வார்கள்.

திருமண ரேகை…..

ஆம்…..இதய ரேகைக்கு மேலே உள்ள கோடுகள் வைத்து திருமண ரேகை கணிக்கப்படுகிறது. இந்த ரேகை ஒருவருக்கு நீண்டு இருந்தால் திருமணம் தாமதமாகும் என்று சொல்லப்படுகிறது.

இதயரேகை சங்கிலி போன்ற அமைப்பில் வரும் சிறு சிறு கோடுகள் இருக்குமேயானால் அவர்களுக்கு வரும் வாழ்க்கைத் துணை அன்பும் பாசமும் மிக்கவர்களாக இருப்பர். அதே சமயம், இதய ரேகை ஆரம்பிக்கும் போது சிறு சிறு கோடுகள் மேலும், கீழுமாகச் சிதறி கிடந்தால் வாழ்க்கைத் துணையுடன் பிரிவு, விவாகரத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கைரேகை நிபுணர்கள் கூறுகின்றன.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here