‘தட்டி தூக்குறோம்’: ஜனாதிபதியை வற்புறுத்தும் குரூப் 16

0

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அடைந்துள்ள பின்னடைவை சரிசெய்து மீண்டும் வெற்றிப் பாதை நோக்கிச் செல்ல முடியும் எனவும், இதற்கான அதிகாரத்தைத் தந்தால் இதனை செய்ய முடியும் என்றும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் 16 பேர் கொண்ட அணியினரே இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரியவருகிறது.

டிலான் பெரேரா, சந்திம வீரக்கொடி ஆகியோர் அண்மையில் லண்டன் பயணித்திருந்தனர். இதனொரு முயற்சியாகவே இவர்கள் லண்டன் சென்றுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த யோசனை தொடர்பாக விரிவாக பேசுவதற்கு லண்டனுக்கு வருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதாகவும், இந்த அணி சார்பாக 06 பேர் அழைக்கப்பட்ட போதிலும், டிலான் பெரேரா மற்றும் சந்திம வீரக்கொடி ஆகியோர் மட்டுமே லண்டன் சென்றுள்ளனர்.

கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலின் போது ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவிற்கு காரணம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் அரசாங்கத்தில் இணைந்திருப்பது என்று குறித்த ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தொடர்ந்தும் அரசாங்கத்தில் இணைந்திருந்தால் கட்சி மேலும் பின்னடைவைச் சந்திக்கும் எனவும், அதிகாரங்களை தமக்கு வழங்கினால் கட்சியை வெற்றிப் பாதை நோக்கி வழிநடத்த முடியும் எனவும் இந்த அணியினர் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த அணியில் உள்ள சிலர், அரசாங்கத்தில் இருந்து ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விலக வேண்டும் என கருத்துக்களை வெளியிட்டாலும், அந்த அணியில் உள்ள பலர் மீண்டும் அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்பில் இருப்பதாக தெரியவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here