அர்ஜூன பிணையில் விடுதலை!

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க சற்று முன்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரை 5 இலட்சம் ரூபா பிணையில் நீதிமன்றம் விடுவித்தது.

முன்னைய செய்தி- அர்ஜூன கைது!

பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க கொழும்பு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெமடகொட பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் நேற்று (28) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் காயமடைந்தனர்.

இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை அடுத்து, முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை கைது செய்யுமாறு வலியுறுத்தி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை ஆரம்பித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று (29) முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கைது செய்யப்பட்ட நிலையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது.

மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்திற்கு எதிராக சுதந்திரக்கட்சி உறுப்பினர்களில் ஒரு அணியை திரட்டி, ஐ.தே.க அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் முயற்சியை ஆரம்பித்துள்ளதால், அதற்கு பதிலடியாகவே இந்த கைது நடந்துள்ளதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here