ஒட்டுமொத்த இலங்கையும் திரும்பிப் பார்க்கும் பாடசாலை… கழிவு முகாமைத்துவத்தில் மைல்கல்!

இன்றைய நவீன உலகில் சனத்தொகை பெருக்கத்தினாலும் மனிதர்களின் தேவைகள் அதிகரித்தமையினாலும் ஒரு தனிநபரினால் சூழலுக்கு வடுவிக்கப்டுகின்ற கழிவுகளின் அளவானது வெகுவாக அதிகரித்துள்ளது.

நகர்ப்புறங்களில் ஒட்டுமொத்தமாக சேரும் கழிவுகளினை முகாமை செய்வதிலும் அவற்றினை இறுதியகற்றல் செய்வதிலும் பாரிய சவால்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் பலாங்கொடை நகரசபையின் அனுசரணையிலும் வழிகாட்டுதலின் கீழும் பாடசாலை மட்டத்தில் வினைத்திறனான கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த வேலைத்திட்டத்தினை பலாங்கொடை அல்-மினாரா பாடசாலையில் பாடசாலை அதிபரின் அர்ப்ணிப்பினாலும் ஒத்துழைப்பினாலும் மிகச்சிறப்பாக முன்னெடுத்து வருகின்றனர்.

பாடசாலை வளாகத்தினுள்ளே மீள்சுழற்சி நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு இருப்பதுடன் அதற்கென ஒரு பொறுப்பாசிரியரும் நியமிக்கப்பட்டுள்ளார். மாணவர்கள் தங்கள் வீடுகளில் சேரும் மீள்சுழற்சி செய்யக்கூடிய கழிவுகளினை தரம்பிரித்து வேறுவேறாக இவ் மீள்சுழற்சி நிலையத்தில் ஒப்படைக்க முடியும். பொலித்தீன் பைகள் முதல் தேங்காய் சிரட்டைகள் வரை இங்கு பெற்றுக் கொள்ளப்படுகின்றன.

கழிவுகளின் தன்மைக்கு ஏற்ப மாணவர்களுக்கு புள்ளிகள் வழங்கப்படுகின்றது. 1000 புள்ளிகளை மாணவர்கள் எட்டியதும் அவர்களால் சேகரிக்கப்பட்ட மீள்சுழற்சி கழிவுகளினை நகரசபை பெற்றுக்கொண்டு மாணவர்களுக்கு ரூபா. 1000 ரூபா பணம் வழங்குகின்றது. இதன்மூலமாக மாணவர்களிடையே கழிவுமுகாமைத்துவம் தொடர்பிலான ஆர்வம் அதிகரிப்பதுடன் கழிவுகள் பெறுமதியானவை எனும் எண்ணப்பாட்டியைும் ஏற்படுத்துவதோடு நின்றுவிடாமல் கழிவுகள் சுற்றாடலில் தேங்குவதும் குறைக்கப்படுகின்றது.

மேற்படி செயற்திட்டம் தொடர்பினில் பாடசாலை அதிபர் இலியாஸ் கூறுகையில் “இச்செயற்திட்டம் ஆரம்பித்த காலத்தில் சில எதிர்ப்புக்களையும் சவால்களையும் ஏற்படுத்தியது. இருந்தும் காலப்போக்கில் இச்செயற்திட்டத்தின் நன்மையும் தாற்பரியமும் மக்களால் உணரப்பட்டது. இன்றுவரை மிகவெற்றிகரமாக இச்செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் மாணவர்கள் ஆர்மாக இதில் கலந்து கொள்கின்றனர்.

இதுவரை எட்டு மாணவர்கள் பணத்தொகையினை பெற்றிருப்பதுடன், அப்துல்லா மற்றும் ஹரின் எனும் தரம் ஐந்தினை சேர்ந்த இரண்டு மாணவர்கள் தலா இரண்டு தடவைகள் பணப்பரிசினை பெற்றுள்ளனர். மூன்றவது முறையாக இலக்கினை பூர்த்தி செய்யும்போது விஷேட பதக்கம் ஒன்றும் தெடர்ந்து இலக்குகளை பூர்த்திசெய்யும் போது சூழல் நேயன், உலக நேயன் போன்ற பட்டங்களும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.” எனத்தெரிவித்தார்.

பலாங்கொடை நகரசபையினால் திட்டமிட்டு செயற்படுத்தப்படும் இச்செயற்திட்டத்தினால் கழிவுகள் பெறுமதியானவையாக மாற்றப்படுவதுடன் சூழல் நேயம்மிக்க ஒரு மாணவர் சமுதாயமும் கட்டியெழுப்பப்படுகின்றது. மேற்படி செயற்திட்டமானது குறித்த பாடசாலையில் மட்டுமன்றி பலாங்கொடை நகரிலுள்ள மேலும்சில பாடசாலைகளிலும் பி்ன்பற்றப்படுகின்றது.

இப்படியான முன்னோடி திட்டங்களை நாட்டிலுள்ள ஏனைய பாடசாலைகளிலும் நடைமுறைபடுத்தி தூய்மையான இலங்கையினை வருங்கால சந்ததிக்கு வழங்கலாமல்லவா.

பணப்பரிசில் வென்ற மாணவர்கள் பாடசாலை அதிபர்

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here