அவுஸ்.க்கு எதிராக 100 ஆண்டுகளில் இல்லாத சாதனை: நம்பர் 1 பந்து வீச்சாளர் மொகமது அப்பாஸ்!

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வென்ற டெஸ்ட் தொடரில் கலக்கிய வேகப்பந்து வீச்சாளர் மொகமது அப்பாஸ் ஆஸி.க்கு எதிராக 100 ஆண்டுகளில் இல்லாத சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இந்த 2 டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் மொகமது அப்பாஸ் 17 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இதில் இவரது சராசரி 10.58. ஆகும். அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த 100 ஆண்டுகளில் இத்தனை ஆகக்குறைந்த சராசரியில் எந்த ஒரு பந்துவீச்சாளரும் விக்கெட்டுகளை வீழ்த்தியதில்லை.

அப்பாஸின் கரியர் சராசரி 15.61. ஐம்பதிற்கும் அதிகமான விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஒரு பந்துவீச்சாளரின் சராசரியிலும் 100 ஆண்டுகளில் இல்லாத சராசரியாகும் இது.

மொகமது ஆசிப் இலங்கையில் 2006ம் ஆண்டு தொடரில் 10.76 என்ற சராசரி வைத்திருந்தார் அதனை முறியடித்தார் அப்பாஸ்.

குறைந்தது 50 விக்கெட்டுகள் என்ற பெஞ்ச் மார்க் வைத்துக் கொண்டால் ஆசியாவில் ரொப் 5 வேகப்பந்து வீச்சாளர்களில் 15.61 என்ற சராசரியில் மொகமது அப்பாஸ் முதலிடம் வகிக்கிறார். இம்ரான் கான் 22.81 என்ற சராசரியில் 2ம் இடத்திலும் ஷபீர் அகமட் 23.03 என்ற சராசரியில் 3ம் இடத்திலும் வக்கார் யூனிஸ் 23.56 என்ற சராசரியில் 4ம் இடத்திலும் வாசிம் அக்ரம் 23.62 என்ற சராசரியில் 5ம் இடத்திலும் உள்ளனர்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் 5 பந்துவீச்சாளர்கள் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர். ஆனால் 1990-ல் மெல்பர்னில் வாசிம் அக்ரம் 160 ரன்களுக்கு 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பிறகு தற்போது அவுஸ்திரேலியாவிற்கு எதிராக மொகமத் அப்பாஸ் 10/95 என்று சாதித்துள்ளார். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பிரெட் ட்ரூமென் 1961-ல் ஹெடிங்லே டெஸ்ட் போட்டியில் அவுஸ்.க்கு எதிராக 11 விக்கெட்டுகளை 88 ரன்களுக்கு கைப்பற்றியதே, அந்த அணிக்கு எதிரான சிறந்த பந்துவீச்சு ஆகும், தற்போது அப்பாஸ் 2ம் இடத்தில் உள்ளார்.

மேலும் யு.ஏ.இ. டெஸ்ட் போட்டியில் ஒரு டெஸ்ட்டில் 10 விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளரானார் மொகமது அப்பாஸ். ஜுனைத் கான் இலங்கைக்கு எதிராக எடுத்த 8/151 தான் இதுவரை சிறந்த பந்து வீச்சாகும்.

ஆசியாவில் 6 தொடர்களில் தொடர்ந்து அவுஸ்திரேலியா வெற்றியடையவில்லை. கடைசியாக 2011-ல் இலங்கையில் வென்றதோடு சரி.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here