வடமாகாண கீதம் ரெடி: அடுத்த அமர்வில் அங்கீகரிக்கப்படுகிறது!

வடமாகாணசபையின் அடுத்த அமர்வு-இறுதி அமர்வு- வரும் 23ம் திகதி இடம்பெறவுள்ளது. அப்போது சபையின் அங்கீகாரத்திற்கு மாகாண கீதம் முன்வைக்கப்படவுள்ளது.

ஈழத்தின் மூத்த இசையமைப்பாளர் கண்ணன் இதற்கு இசையமைத்துள்ளார்.

                                                    பல்லவி

வட மாகாணம் எங்களின் வளர் தாயகம்!- இங்கு

வாழும் எமக்கு அது அறிவாலயம்!

 

                                                    அனுபல்லவி

திடங்கொண்டு உழைப்போர்கள் திகழும் இடம்!- இலங்கைத்

திருநாட்டின் தலையாக துலங்கும் இடம்!

 

                                                   சரணங்கள்

மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணமும்- கிளி

நொச்சியுடன் வவுனியா மா வட்டங்களும்

எந்நாளும் வளஞ்சேர்க்கும் எங்கள் பூமி!- என்றும்

எழிலார் “வட மாகாணம்“ என்னும் பூமி…

(வடமாகாணம் எங்கள் வளர் தாயகம்)

 

நிலமும், கடல்வளமும் நிறைந்த இடம்!- அன்பு

நெறிகாக்கும் ஆலயங்கள் அமைந்த இடம்!

பலம் கொண்ட மறவர்கள் வாழும் இடம்!- நல்ல

பாவலரும், நாவலரும் வாழும் இடம்!

 

ஒற்றுமையாய் வாழ உறுதிகொள்வோம்!- நல்

ஒழுக்கம் பண்பாடுகளால் உயர்ந்து நிற்போம்!

பற்றோடு உழைத்து நாம் வெற்றி காணுவோம்!- இந்த

பாரில் தலைநிமிர்ந்து முன் செல்லுவோம்!

(வடமாகாணம் எங்கள் வளர் தாயகம்)

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here