வவுனியா பாடசாலையில் தோன்றிய கடவுள்!

வவுனியா செட்டிகுளம் பகுதியில் உள்ள கங்கன்குளம் ஸ்ரீ சுப்பிரமணியம் வித்தியாலயத்தில் நவராத்திரி பூசைக்காக வைக்கப்பட்ட கும்பத்தில் இன்று கடவுள் உருவம் தோன்றியதாக பரபரப்பு ஏற்பட்டது.

வவுனியா செட்டிகுளம் பிரதேசத்திலுள்ள கங்கன்குளம் ஸ்ரீ சுப்பிரமணியம் வித்தியாலயத்தில் நவராத்திரி 9ஆம் நாள் பூஜையின்போது கும்பத்திற்கு வைக்கப்பட்ட தேங்காயில் கண் மற்றும் முகம் ஒன்றின் தோற்றம் தெரிந்துள்ளது.

குறித்த தோற்றம் சரஸ்வதியினுடையது என தெரிவித்து பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் அதனை பார்வையிட்டனர்.

இது தொடர்பில் பாடசாலை அதிபர் திருமதி அன்பரசி வசந்தராஜா கருத்து தெரிவிக்கையில்- நவராத்திரி பூசைக்காக 9 நாட்களுக்கு முன்னர் கும்பம் வைத்தோம். அந்த கும்பத் தேங்காயில் தற்போது முகத்தோற்றம் தெரிகின்றது.

அதில் இரு கண்கள் வடிவாக தெரிகின்றது. இது ஒரு நல்ல விடயம் என பலரும் தெரிவிக்கின்றனர். கடவுள் உருவம் காட்சி கொடுத்தமை மகிழ்ச்சியாகவுள்ளது“ எனத் தெரிவித்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here