வடக்கு கிழக்கில் காணிகளை விடுவிக்க அமைச்சரவை அனுமதி!

வடக்கு,கிழக்கு பிரதேசங்களில் பாதுகாப்பு தரப்பினரால் கையகப்படுத்தப்பட்டிருந்த தனியார் காணிகளை அவற்றின் உரிமையாளர்களுக்கு விடுவிக்கும் அரசின் செயற்திட்டத்தின் கீழ் ஒரு பகுதி காணிகள் விடுவிக்கப்பட்டவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கு தேவையான நிதியை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை கடற்படையின் பாவனையிலிருந்த மன்னார், முள்ளிக்குளத்தில் 23 ஏக்கரும் முல்லைத்தீவு, முள்ளிவாய்க்காலில் 53 ஏக்கர் நிலப்பரப்பும், இலங்கை இராணுவத்தின் 224 ஆவது படைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ள திருகோணமலை தோப்பூரில் 3 ஏக்கர் காணியையும் ஆரம்ப உரிமையாளரிடம் விடுவிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோன்று இந்தப் பிரதேசங்களில் குடியமர்த்தப்படவுள்ள பொது மக்களுக்கு தமது வாழ்வாதாரத்தை நிலையான வகையில் முன்னெடுக்கக் கூடிய வகையில் அடையாளம் காணப்பட்டுள்ள மூன்று குளங்களை சீர்செய்து அந்தப் பிரதேசங்களில் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்து அவற்றை ஆரம்ப உரிமையாளரிடம் கையளிக்கப்பட வேண்டும்.

இதற்கு தேவையான நிதி வழங்குவதற்காகவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மீள் குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துக் கலாசார அலுவல்கள் அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here