தமிழ் சினிமாவில் பிகினியில் கலக்கியவர்கள்… அன்று முதல் இன்று வரை!

இந்தி சினிமாவில் 60, 70களிலேயே ஹாலிவுட்டுக்கு நிகரான கவர்ச்சியும் தாராளமும் பொங்கி வழிய ஆரம்பித்துவிட்டது. ஆனால், தென்னிந்திய சினிமாக்களில் யாரேனும் நடிகை மாராப்பு விலகி நடித்தாலே நாள் முழுவதும் அவர்களை பற்றித்தான் முட்டுச்சந்துகளில் நின்று பேசிக் கொள்வார்கள்.

இன்று அந்த பார்வை நிறைய மாறி விட்டது. இன்னும் சொன்னால், நடிகைகள் எவ்வளவிற்கு எவ்வளவு தாராளம் காட்டுகிறார்களோ, அவ்வளவிற்கு அவ்வளவு ரசிகர்கள் மொய்ப்பார்கள். சினிமா மட்டுமல்ல, எல்லா துறைகளிலும், விளம்பரங்களிலும் கவர்ச்சி தாராளமாகி விட்டது. அதனால் நடிகைகளின் கவர்ச்சி பெரிய விசயமாக இல்லாமல் போய் விட்டது.

இப்படியான வரலாறுடைய தமிழ் சினிமா கவர்ச்சி பற்றிய தொகுப்பே இது.

அன்று தொடக்கம் இன்று வரையான கவர்ச்சி கன்னிகளின் தொகுப்பு இது.

எவ்வளவுதான் கரித்துக் கொட்டினாலும், அரைகுறை ஆடை நடனம், பிகினி என கலக்கிய நடிகைகள் அன்றும் இருந்தனர். அப்போதே பிகினியை தெறிக்க விட்டவர்கள் பற்றிய பெரிய லிஸ்றே உள்ளது.

தமிழ் சினிமாவின் பிகினி வரலாற்றை அறிய ஏங்கிக் கொண்டிருக்கும் ரசிக மணிகளிற்காக, அன்று முதல் இன்று வரை பிகினியில் கலக்கிய தென்னிந்திய நடிகைகளின் தொகுப்பு….

மஞ்சுளா

எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் மஞ்சுளா. பின்னர் விஜயகுமாருடன் வாழ்க்கையில் செட்டில் ஆகி விட்டார்.

ஸ்ரீதேவி

இந்தியாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை. தெனிந்தியா மொழிகளில் மட்டுமின்றி, இந்தியிலும் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தவர். 80, 90களில் அதிக சம்பளம் வாங்கிய நடிகை என்ற பெருமைக்குரியவர். போனி கபூருடன் வாழ்க்கையில் செட்டில் ஆனார்.

மாதவி

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற ஐந்து மொழிகளில் பதினேழு வருடங்களாக முன்னணி நடிகையாக நஜொலித்தார். இவர் சிறந்த பரதநாட்டிய கலைஞரும் கூட. தமிழில் அப்போதே கொஞ்சம் அதிகமாக தாராளம் காட்டியவர். இந்தியில் நடித்த ‘ஏக் துஜே கேலியே’ மற்றும் ‘மரோச்சரித்திரா’ போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை.

அமலா

டி.ஆர்-ன் மைதிலி என் காதலி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். ஆரம்பத்திலேயே ஹோம்லியான நடிகை என பெயர் பெற்ற அமலா, சத்யராஜ் உடன் நடித்த ‘ஜீவா’ (1988) என்ற படத்தில் சூப்பர் ஹாட் பிகினியில் தோன்றினார். அமலா இப்படி ஹாட் பிகினியில் தோன்றியது இன்றைய இளசுகள் பலரிற்கு தெரியாது. இப்போது சமந்தாவின் மாமியார்!

சில்க் ஸ்மிதா

அம்மணியின் கவர்ச்சி பற்றி நாம் எழுதினால் தெய்வக்குற்றமாகி விடலாம். 80களில் தென்னிந்திய சினிமாவின் கவர்ச்சி பிராண்ட்டாக இருந்தவர் சில்க் ஸ்மிதா. இவர் பெரும்பாலான படங்களில் பிகினியில் தோன்றி இருக்கிறார். நாம் படத்தை போட்டுத்தான் நீங்கள் பார்க்க வேண்டுமென்றில்லை.

மும்தாஜ்

இவரும் டி.ஆர் இன் அறிமுகம்தான். 2000களின் சில்க் ஸ்மிதா இவர்தான். முதல் படத்தில் இருந்தே செக்ஸி மற்றும் கவர்ச்சியான வேடங்களில் நடிக்க துவங்கியவர். படங்களில் இவரது செக்ஸி, கவர்ச்சி காட்சிகள் இருக்கும் என்ற நிலைமை போய், அந்த காட்சிகள் மட்டும்தான் இருக்கும் என்ற நிலைமையே ஏற்பட்டது. கவர்ச்சி வெடிகுண்டாக அறிமுகமானவர், பிக்பாஸ் வீட்டில் வேறொரு முகம் காட்டியிருந்தார்.

சிம்ரன்

நெடுங்காலமாக தென்னிந்திய சினிமாவை கட்டியாண்ட ராணி. இந்த பட்டியலில் மிகச்சிலரே இருக்கிறார்கள். ஹோம்லி, கவர்ச்சி என எந்த ரூட்டை எடுத்தாலும் அதில் கச்சிதமாக பயணித்தவர் இவர். இன்றுவரை சிம்ரனிற்கு ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இப்போதும் குணசித்திர வேடங்களில் நடிக்கிறார்.

கிரண்

ஜெமினி, அன்பே சிவம், வில்லன் என தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த கவர்ச்சிப்புயல். வழக்கமாக படங்களில் நாயகியிருந்தால், கவர்ச்சிக்கு இன்னொருவர் தேவை. அம்மணியை புக் செய்தால், இரண்டு ரூட்டையும் கவர் செய்வார். பட வாய்ப்புக்கள் குறையை கவர்ச்சியின் எல்லை வரை சென்றார். ஆனால் காணாமல் போய்விட்டார்.

நயன்தாரா

தமிழ் சினிமாவில் சிறிது காணாமல் போயிருந்த பிகினியை மீண்டும் பில்லா மூலம் தமிழ் சினிமாவிற்கு கொண்டு பெருமை நயன்தாராவையே சேரும். தொடர்ந்து சில படங்களில் பிகினியில் தோன்றினார். இதன்மூலம் தமிழ் சினிமாவில் ஒரு பிகினி புரட்சியையே நடத்தினார் என்றும் கூறலாம். இவரை தொடர்ந்து பலர் தென்னிந்தியாவில் பிகினியில் நடிக்க துவங்கினார்கள். இப்போது நடிப்பில் இன்னொரு பரிமாணம் காட்டி, அடுத்த சிம்ரனாக உருவாகியிருக்கிறார்.

அனுஷ்கா

தமிழ் பில்லாவில் நயன்தாரா பிகினியில் வர, தெலுங்கு பில்லாவில் அனுஷ்கா பிகினியில் களமிறங்கினார். கவர்ச்சி, நடிப்பு, திறமை, பாக்ஸ் ஆபீஸ் என நயன்தாரவிற்கு சரியான டப் கொடுத்து வருகிறார். தெலுங்கு, தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார். விரைவில் டும் டும் சத்தம் கேட்குமென தெரிகிறது.

ப்ரியா மணி

பருத்திவீரன் மூலம் கிராமத்து முகமாக அறிமுகமானவர். அதில் நடிப்பு திறமையை வெளிப்படுத்தியும் ப்ரியாமணிக்கு அதற்கு அடுத்து சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிய வெற்றி கிடைக்கவில்லை. தெலுங்கு, கன்னடம் என இவர் தொடர்ந்து நடித்து வந்தார். துரோணா என்ற படத்தில் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் பிகினியில் நடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இப்போது மனதுக்குப்பிடித்தவருடன் வாழ்க்கையில் செட்டில் ஆகி விட்டார்.

எமி ஜக்சன்

மதராசப்பட்டினம் மூலம் அறிமுகமான வெள்ளாவி. இந்த பட்டியலில் எமியை உள்ளடக்கியது கிரிமினல் குற்றமாகுமா என்பது தெரியவில்லை. அசால்ட்டாக ஆடையை கழற்றியெறிந்து விட்டு டாப்லெஸ் போஸ் எல்லாம் கொடுத்து விட்டு போய்க்கொண்டிருக்கும் ஒருவரை, மினைக்கெட்டு இந்த பட்டியலில் இணைக்கலாமொ என்பது தெரியவில்லை.

ராய் லட்சுமி

கற்க கசடற என்ற படத்தில் லட்சுமி ராயாக அறிமுகமாகி, பிறகு ராய் லட்சுமியாக மாறியவர். ஆனால், இன்று வரை இவரது கவர்ச்சியில் மட்டும் மாற்றமே இல்லை. கவர்ச்சிக்காகவே அம்மணியை படங்களில் புக் செய்கிறார்கள். தயாரிப்பாளர்களினதும், ரசிகர்களினதும் எதிர்பார்ப்பிற்கு குறைவைக்காமல் விருந்து படைத்து வருகிறார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here