கவர்ச்சி நடிகை மீது வில்லன் நடிகர் புகார்!

‘நாட்டாமை’ படத்தில் கவர்ச்சி டீச்சர் வேடத்தில் நடித்த நடிகை ராணி, தன்னுடன் சீரியலில் இணைந்து நடித்த நடிகர் சண்முகராஜான் மீது காவல் நிலையத்தில் பாலியல் புகார் தெரிவித்தார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விசாரணை நடத்தி போலீசார் நடவடிக்கை எடுக்கு முயன்ற போது, இந்த விவகாரம் தொடர்பாக சமரசம் பேசப்பட்டு, சண்முகராஜன் ராணியிடம் மன்னிப்பு கேட்டதால், பிரச்சினை முடித்துக் கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், நடிகை ராணி மீது சண்முகராஜன் நடிகர் சங்கத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதில்- இத்தனை வருட அனுபவத்தில் இப்படி ஒரு குற்றச்சாட்டு என் மீது வந்தது கிடையாது. கை கலப்பாக நடந்த விவகாரத்தை பாலியல் புகார் என தவறாக கூறிவிட்டார். இந்த குற்றச்சாட்டிற்காக நடிகை ராணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், எனக்கு ரெட் கார்ட் போட்டாலும் பரவாயில்லை சினிமாவை விட்டு விலக தயார். அதே போல், அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here