ஆசியாவின் இளைய புயல் இலங்கை வீராங்கணையே!

ஆர்ஜென்ரீனாவல் நடந்த உலக இளையோர் ஒலிம்பிக் பந்தயத்தில் இலங்கையின் 17வயதான ஸெலிண்டா ஜென்சன் ஆசியாவின் அதிவேக இளைய ஓட்ட வீராங்கணையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

இரண்டு சுற்றுக்களாக நடத்தப்படும்  200 மீட்டர் பந்தயத்தில் அவர் ஒன்பதாவது இடத்தையே பிடித்திருந்தாலும், பலரையும் திரும்பி பார்க்க வைத்தார்.

22 வீராங்கணைகளிற்குள் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட போட்டிகளின் அடிப்படையில் வெற்றிபெற்றவர்கள் அறிவிக்கப்படுவார்கள். இதனடிப்படையில் ஸெலிண்டா ஒன்பதாவதாக தரப்படுத்தப்பட்டுள்ளார்.

போட்டியின் ஒரு கட்டத்தில் இரண்டாமிடத்தையும், இன்னொரு கட்டத்தில் 5ம் இடத்தையும் பெற்றார்.

இரண்டாமிடத்தை பெற்றபோது பந்தய தூரத்தை அவர் 24.07 விநாடிகளில் ஓடி முடித்தார்.

இது இலங்கையின் ஆசிய இளையோர் பந்தய வரலாற்றில் மூன்றாவது சிறந்த பெறுபேறாகும் முன்னதாக 1994இல் சுசந்திகா ஜயசிங்க 23.18 விநாடிகளிலும், தமயந்தி தர்சா 23.21 விநாடிகளிலும் இலக்கை எட்டியதே சிறந்த பெறுபேறுகளாகும்.

தற்போது 17 வயதான ஸெலிண்டா ஜென்சன் இன்னும் இரண்டு வருடங்கள் இளையோர் பந்தயங்களில் கலந்து கொள்ள முடியுமென்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here