லோன் வழங்க படுக்கையறைக்கு அழைத்த வங்கி மேலாளருக்கு உருட்டுக்கட்டை அடி: வீடியோ

வங்கியில் கடன் வேண்டும் என்றால் என்னுடன் தனிமையில் இருக்க வேண்டும் என கூறிய வங்கி மேலாளரை ரோட்டிற்கு இழுத்து வந்து பெண் ஒருவர் உருட்டுக்கட்டையால் அடித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் தவங்கரேயில் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் அங்கிருக்கும் வங்கி ஒன்றில் ரூ.2 லட்சம் கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில், கடன் கேட்டு விண்ணப்பித்த இப்பெண்ணை வங்கியின் மேலாளர் பாலியல் ரீதியாக சீண்டியுள்ளார். கடன் வேண்டுமெனில் தன்னுடன் படுக்கையறைக்கு வர வேண்டும் எனவும் மிரட்டியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த அப்பெண் வங்கி மேலாளரின் சட்டையை பிடித்து சாலைக்கு இழுத்து வந்து பொதுமக்கள் முன்னிலையில் உருட்டுகட்டையால் அடித்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாலியல் ரீதியாக சீன்டியவரை தைரியமாக எதிர்கொண்ட அப்பெண்ணிற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here