இளம் மொடலை துண்டுதுண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த மாணவன் கைது!

இளம்பெண்ணை கொலை செய்து சூட்கேஸூக்குள் அடைத்து ஓலா வாடகை கார் மூலம் தூக்கிச் சென்று சாலையில் வீசிய மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் மும்பையில் நடந்தது.

மாடலாகும் ஆசையில் ராஜஸ்தானில் இருந்து மும்பைக்கு வந்தவர் மான்சி தீக்ஷித். 20 வயதான மான்சிக்கும், ஹைதராபாத்தில் இருந்து மும்பைக்கு வந்து கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த 19 வயதான முஸாமில் சையத் எனும் மாணவனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் நெருக்கமாக பேசி பழகி வந்த நிலையில், அந்தேரியில் உள்ள தனது வீட்டுக்கு மான்சியை சையத் அழைத்துள்ளார். வீட்டிற்கு சென்ற மான்சிக்கும் சையதிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த சையத், மான்சியை தாக்கியுள்ளார். இதில், மான்சி மயக்கமடைந்துள்ளார். பின்னர் மான்சியின் கழுத்தை நெரித்து கொலை செய்து, அங்கிருந்த பெரிய டிராவல் பேக்கில் அவரது உடலை திணித்துள்ளார்.

தொடர்ந்து, தன்னுடைய செல்போனில் உள்ள ஓலா ஆப் மூலம் கார் புக் செய்து அதில், மான்சி உடல் அடைக்கப்பட்ட பெட்டியை ஏற்றியுள்ளார். விமான நிலையம் போக வேண்டும் என கூறிய சையத், செல்லும் வழியிலேயே காரை மலாடுக்கு திருப்பச் சொல்லி பாதி வழியிலேயே இறங்கியுள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அந்த பெட்டியை வீசி விட்டு ஆட்டோ பிடித்து தப்பிச் சென்றுள்ளார்.

சையத்தின் போக்கில் சந்தேகம் ஏற்பட, ஓலா ஒட்டுனர் தனது காரை திருப்பி வந்து பார்த்துள்ளார். அங்கு சையத் எடுத்து வந்த பெட்டி கிடப்பதை பார்த்த அவர், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பெட்டியை திறந்து பார்த்துள்ளனர். அதில், இளம்பெண் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், உடலை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அத்துடன் அங்கிருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்ட போலீசார் சையத்தை கைது செய்துள்ளனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here