இரட்டை குழந்தை பிறந்ததால் கணவன் தலைமறைவு: கண்டுபிடித்து தரக் கோரும் மனைவி!

இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்ததால் கணவர் தலைமறைவாகி விட்டதாகவும், குழந்தைகளைக் காப்பாற்ற வேலை கொடுத்து உதவுமாறும் ராமநாதபுரம் ஆட்சியரிடம் பெண் ஒருவர் கண்ணீர் விட்டு கதறி அழுது மனு அளித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே நெல்மடூர் கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ் மனைவி பானுப்பிரியா (26). இவர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 6 மாதங்களுக்கு முன் ஒரே பிரசவத்தில் இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன.

இந்நிலையில் மாவட்ட ஆட்சிரியரின் மக்கள் குறைதீர் முகாமுக்கு தனது இரு பெண் குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு பானுப்பிரியா வந்தார்.

அங்கு ஆட்சியர் கொ.வீரராகவ ராவிடம், “எங்களுக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன. இதனால் கோபமுற்ற கூலி வேலை செய்து வந்த எனது கணவர் தர்மராஜ் தலைமறைவாகி விட்டார். எனவே கணவரை கண்டுபிடித்துத் தர வேண்டும்“ என ஆட்சியரிடம் மனு அளித்தார்.

பிறந்து 6 மாதங்களே ஆவதால் இரு குழந்தைகளையும் காப்பாற்ற மட்டுமாவது தனக்கு ஏதேனும் ஒரு வேலை கொடுத்து உதவுமாறும் ஆட்சியரிடம் பானுப்பிரியாவும், அவரது தாய் சண்முக வள்ளியும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் தெரிவித்தார்

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here