தமிழர் மரபுரிமையை பாதுகாக்க உதயமாகிறது புதிய அமைப்பு!

”தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்வியலில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் மற்றும் கலாசாரங்கள் என்பன அருகி வருகின்றன. தமிழர்களின் புராதன அடையாளங்களை, போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லாந்தர்கள் அழித்தனர். இவர்களுக்கு இணையாக, இலங்கை அரசாங்கமும், தமிழர்களின் புராதன அடையாளங்களை அன்று தொட்டு இன்று வரை அழித்து வருகிறது.

எனவே, தமது எதிர்காலச் சந்ததியினருக்கு, இவற்றை எடுத்துக் கூறும் வகையில் ‘மரபுரிமை மையம்’ மற்றும் ‘தமிழர் நாகரிக மையம்’ எனும் தொனிப்பொருள்களிலான கருத்திட்டங்கள் உருவாக்கப்படவுள்ளன.

இவ்வாறு கூறியிருக்கிறார் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன். இந்தக் கருத்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு, எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் மக்களின் முன்னைய காலத்து வாழ்க்கை முறை, வசிப்பிடம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வகையில், மாங்குளத்தில் சுமார் 48 ஏக்கர் காணியில் “தமிழர் நாகரிக மையம்” கருத்திட்டம் உருவாக்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வும், வியாழக்கிழமை மாலை, மாங்குளத்தில் இடம்பெறவுள்ளது.

நல்லூர்க் கோவிலுக்கு அண்மையிலுள்ள சாதனா பாடசாலையின் ஒரு பகுதியை ஒதுக்கி “மரபுரிமை மையம்” கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி, அங்கு பண்டையகால உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

இந்த நிகழ்வு, எதிர்வரும் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு, குறித்த பாடசாலையில் நடத்தப்படவுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here