தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: கோமாவில் இருந்தவர் 5 மாதத்தின் பின் உயிரிழந்தார்!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் கலவரமாக மாறி போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் 13 பேர் பலியான நிலையில், காயமடைந்து கடந்த 5 மாதங்களாக கோமாவில் இருந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்தப் போராட்டம் கடந்த மே 22-ம் தேதி 100-வது நாளை எட்டியது.

பொதுமக்கள் பேரணி சென்றனர். இந்தப் பேரணியின்போது திடீரென கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்கள் சிலர் போலீசார் மீது கற்களை வீசினர். இதனால் போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது.

போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். தற்போது ஜஸ்டின் மறைவால் பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரித்திருக்கிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here