அஜித்திற்கு உதவ ஓடிச் சென்ற ரசிகர்களிற்கு ஏற்பட்ட அதிர்ச்சி அனுபவம்!

சென்னை விமானநிலையத்தில் நடிகர் அஜித்தின் சூட்கேஸ் மாட்டிக்கொண்டது. அதைப் பார்த்து உதவுவதற்காக ஓடிவந்த ரசிகர்களிற்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இயக்குநர் சிவாவின் இயக்கத்தில், விஸ்வாசம் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் அஜித். வீரம், வேதாளம், விவேகம் படங்களைத் தொடர்ந்து நான்காவது வாய்ப்பையும் சிவாவுக்கு வழங்கியிருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார் அஜித். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடி நயன்தாரா.

முதன் முதலாக டி.இமான் அஜித் படத்துக்கு இசையமைத்து வருகிறார். தொடர்ந்து ஹைதராபாத்திலும் பல ஊர்களிலும் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. 2019 பொங்கல் வெளியீடாக திரைக்கு வர இருக்கும் விஸ்வாசம் படத்தின் ஷூட்டிங்கிற்காக, அஜித் நேற்று (15.10.18) காலை விமான நிலையம் வந்தார்.

அப்போது நடந்த சம்பவத்தைத்தான் ரசிகர்கள் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.

தல அஜித்தின் ரசிகர்கள் தங்களின் முகநூலில் நேற்று பதிவிட்டுள்ளதுதான் இப்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது.

அந்த முகநூல் பதிவில், இன்று (நேற்று) அதிகாலை வீட்டிலிருந்து சென்னை விமானநிலையத்திற்குக் கிளம்பினோம். செல்லும் வழியில் காவல்துறையினர் வழிமறித்து சோதனையிட்டனர். அதன்பிறகு விமானநிலைத்தின் நுழைவுவாயிலில் மீண்டும் காவலர்கள் சோதனையிட்டனர், இப்படிப் பல தடைகளைத் தாண்டிச் சென்றால், அங்கே, மனிதக் கடவுளின் தரிசனம் கிடைத்தது.

தல அஜித் அவர்கள் காரிலிருந்து இறங்கினார். எங்களைப் பார்த்து புன்சிரிப்பு சிரித்தார். அப்போது, திடீரென்று அவரது சூட்கேஸ் படியில் மாட்டிக்கொண்டது. உடனே என்னுடைய நண்பன் அஜீத்குமாருக்கு உதவி செய்ய ஓடினான். அவரிடம் நெருங்கினான். Its ok என்று அஜித்தே சூட்கேஸை எடுத்துக்கொண்டார், மீண்டும் சிரித்தார். அதே அழகான சிரிப்பு.

நாங்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ளக் கேட்டோம். விமானத்திற்கு நேரம் ஆகிவிட்டது என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

பிறகு என்ன நினைத்தாரோ…. அவரே அழைத்து, சரி எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்ல இறுதியில் திரையுலக முதல்வரின் தரிசனம் கிடைத்தது. அதை புகைப்படமாகவும் பதித்துக்கொண்டோம்.

இவ்வாறு முகநூலில் எழுதியிருக்கிறார்கள்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here