இரட்டை கோபுர தாக்குதலுடன் தொடர்புடையவர் விடுதலை!

அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுடன் தொடர்புடையவரின் நண்பரை ஜேர்மனி விடுதலை செய்யவுள்ளது. கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி நடந்த அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலில் நேரடியாக தொடர்புபட்டிருக்கவில்லையென இவர் மறுத்து வந்திருக்கிறார்.

மொரோக்கோவை சேர்ந்த மவுனி அல்-மொசாஸாடெக் என்பவரே விடுதலையாகிறார். இரட்டை கோபுர தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட விமானத்தில் இருந்த பயணிகளின் உயிரிழப்பதற்கு காரணமாக இருந்தார் என குற்றம்சாட்டப்பட்டு சுமார் 15 ஆண்டுகளை சிறையில் கழித்துள்ளார்.

தனது தண்டனை காலத்தில் பெரும்பகுதியை அனுபவித்துவிட்ட இவர் தற்போது மொரோக்கோவிற்கு நாடு கடத்தப்படுகிறார்.

தனக்கும், 9/11 சம்பவத்துக்கும் தொடர்பில்லை என்று மொசாஸாடெக் தொடர்ந்து கூறி வந்தாலும், இந்த தாக்குதலை நடத்தியவர்களின் நண்பராக இவர் இருந்தார் என்று குற்றம்சாட்டப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here