வில்லன் நடிகர் மீதான பாலியல் புகாரை விலக்கிய கவர்ச்சி நடிகை!

நடிகர் சண்முகராஜன் மீது அளித்த பாலியல் புகாரை வாபஸ் பெற்றார் நடிகை ராணி. சண்முகராஜன் மன்னிப்பு கேட்டதை அடுத்து அப்புகாரை வாபஸ் பெற்றுள்ளார் ராணி.

கமல்ஹாசனின் விருமாண்டி படத்தின் மூலம் நல்ல நடிகராக அறியப்பட்டவர் சண்முகராஜன். இவர் ஏராளமான படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

திரைப்பட நடனக்குழுவில் இருந்த ராணி, கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன் நடித்த வில்லுப்பாட்டுக்காரன் படத்தின் மூலம் நாயகி ஆனார். இதன் பின்னர் விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் ஓ போடு பாடலுக்கு நடனம் ஆடினார். இப்பாடலின் மூலம் உலக அளவில் புகழ் பெற்றார் ராணி. காதல் கோட்டை படத்தில் ‘வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா’ பாடலுக்கும் இவர் நடனம் ஆடினார். இப்பாடலும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பு பெற்றது. சரத்குமார் நடித்த நாட்டாமை படத்தில் ராணி நடித்திருந்த டீச்சர் கதாபாத்திரமும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தது. தமிழ் தவிர தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்து வந்த ராணி தற்போது சண்முகராஜன் மீது கூறியுள்ள பாலியல் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திரைப்படங்களில் நடித்து வரும் சண்முகராஜன், நந்தினி என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்து வருகிறார். இதே தொடரில் நடிகை ராணியும் நடித்து வருகிறார். இத்தொலைக்காட்சி தொடரில் தனக்கு கணவராக நடிக்கும் அந்த சண்முகராஜன், காட்சிகளின் போது தவறான எண்ணத்துடன் தொடுவதாக ராணி புகாரில் கூறியுள்ளார். அடிப்பது போன்ற காட்சிகளில் தன்னை சண்முகராஜன் உண்மையிலேயே அடித்ததாகவும், இதுகுறித்து கேட்டபோது தன்னையும், தனது கணவரையும் சண்முகராஜன் தாக்கியதாகவும் புகாரில் கூறியிருந்தார். படப்பிடிப்பு சமயங்களில் சண்முகராஜன் தன்னுடன் உணவருந்த வருமாறும், தனியாக தங்க அழைத்ததாகவும் அந்த புகாரில் கூறியிருந்தார்.

இதையடுத்து புகாரில் குற்றம்சாட்டப்பட்ட நடிகர் சண்முகராஜன் செங்குன்றம் காவல்நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். போலீசார் விசாரணையில் சண்முகராஜன் – ராணி இடையே சமரசம் ஏற்பட்டது. இதனால் புகாரை வாபஸ் பெற்றார் ராணி.

பின்னர் ராணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சண்முகராஜன் மன்னிப்பு கேட்டதால் புகாரை வாபஸ் பெற்றேன் என்று கூறியுள்ளார்.

சண்முகராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பாலியல் புகாரில் உண்மையில்லை. எங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடு களைந்து சமரசம் ஏற்பட்டு விட்டது என்று கூறியுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here