ஒவ்வொருவருக்கும் 60 இலட்சம் அபராதம்: தூத்துக்குடி மீனவர்களிற்கு இலங்கை நீதிமன்றம் தண்டனை!

தூத்துக்குடி திரேஸ்புரம் மீனவர்கள் எட்டு பேருக்கு 3 மாத சிறைத் தண்டனையுடன், ஒவ்வொருவருக்கும் தலா 60 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது இலங்கை கல்பிட்டி நீதிமன்றம்.

இலங்கை எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களால் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதாக தொடர்ந்து புகார் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த 18.08.2018 ந் தேதி தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற எட்டு மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்த போது இலங்கை கடற்படை கைது செய்தது.

மீனவர்களின் வழக்கு இன்று கல்பிட்டி சுற்றுலா நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் விசாரிக்கப்பட, வழக்கை விசாரித்த நீதிபதி, ” மீனவர் ஒருவருக்கு தலா 60 லட்சம் ரூபாய் அபராதமும், வரும் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி வரை மூன்று மாதங்கள் வரை சிறை தண்டனையும் அளித்து உத்தரவிட்டார்.

இதனை அடுத்து மீனவர்கள் 8 பேரும் புத்தளம் சிறையில் அடைக்கப்பட்டனர். இலங்கை நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினால் தூத்துக்குடி மீனவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here