பேஸ்புக்: நாள் முழுவதும் உல்லாசம்; 12 யுவதிகளும், 24 வாலிபர்களும் கைது!

பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட போதைப் பொருள் களியாட்ட நிகழ்வில் கலந்துக்கொண்டிருந்த 36 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரத்தினப்புரி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவர்ககளிடையே 12 யுவதிகள் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டிருந்தவர்களில் சந்தேக நபரொருவரிடமிருந்து 540 மில்லி கிராம் எடையுடைய ஐஸ் என்ற போதைப் பொருளும் 4 கிராம் கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளதுடன் மற்றுமொரு சந்தேக நபரிடமிருந்து 4 போதை வில்லைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்து இவர்கள் பேஸ்புக் ஊடாக ஒன்றிணைந்து ஹோட்டலொன்றில் ஒரு நாள் முழுவதும் களியாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே பொலிஸாரினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here