காணாமல் போனவர்களிற்கான போராட்டம் 600 நாளை எட்டியது!

தமது உறவுகளின் கதியை அறிய வேண்டுமென்பதற்காக வவுனியாவில் போராட்டம் நடத்தி வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்றுடன் 600வது நாளை எட்டியுள்ளது.

தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் குடும்ப உறவுகளினால் வவுனியாவில் சுழற்சி முறையில் போராட்டம் மேற்கொண்டு வருகிறது. எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் தொடரும் இந்த போராட்டம் இன்று 600 நாளை எட்டியது.

இதையடுத்து இன்று பிற்பகல் 12.30 மணியளவில் கந்தசாமி ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் பேரணியாக பிரதான வீதி வழியாக சென்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக வவுனியா கந்தசாமி ஆலயத்தில் தமிழ் அரசியல் கைதிகளில் விடுதலையை வலியுறுத்தி தேங்காய் உடைத்து விஷேட பூஜை வழிபாடுகளை மேற்கொண்டுள்ளதுடன் தீச்சட்டி ஏந்தியவாறு பிரார்த்தனை மேற்கொண்டனர். பின்னர் பஜார் வீதி வழியாக ஹொறவப்பொத்தானை வீதியை அடைந்து அங்கிருந்து நீதிமன்றம் வழியாக போராட்ட களத்திற்கு பேரணியாகச் சென்றனர்.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய பதாதைகளைத் தாங்கியிருந்தனர். 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here