அரசியல் கைதிகள் விடுதலை: ஐ.நா அலுவலகத்தில் பல்கலைகழக மாணவர்கள் மகஜர்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நடை பயணத்தில் ஈடுபட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் இன்று யாழில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் மகஜர் கையளிக்கப்பட்டது.

அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் ஐ.நா சபை ஆக்கபூர்வமாக செயற்பட வேண்டும், இலங்கை அரசாங்கத்திற்கு தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வலியுறுத்தி அழுத்தத்தினை பிரயோகிக்க வேண்டும் என்று மகஜரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் கி.கிருஸ்ணமீனன்,  நடைபயண போரட்டத்தில் ஈடுபட்ட ஏனைய மாணவ, மாணவிகள் ஐ.நா யாழ்ப்பாண அலுவலகத்திற்கு நேரடியாக சென்று மகஜரை கையளித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here