வீரத்தமிழர்கள் வாழ்ந்த மண் கிளிநொச்சி: பாரதிராஜா சிலிர்ப்பு!

கிளிநொச்சி புகைப்படப்பிடிப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் புகைப்படப்பிடிப்பாளர்களைக் கௌரவிக்கம் நிகழ்வு இன்று திங்கட்கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்றது.

கிளிநொச்சி பாரதிஸ்டார் விடுதியில் இடம்பெற்ற இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கலந்து கொண்டார். இதன்போது கிளிநொச்சி மாவட்டத்தில் புகைப்படத்துறையில் ஆர்வமாகச் செயற்பட்ட மூத்த புகைப்பட கலைஞர்கள் கௌரவிக்கப்பட்ட இந்நிகழ்வில் இயக்குனர்களான பாரதிராஜா மற்றும் இயக்குனரும் நடிகருமான பாக்கியராஜ் உள்ளிட்ட குழுவினர் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வீரம் விளைந்த மண்ணில் நின்று இக்கலைஞர்களைப் பாராட்டுவது எமக்கு மேலும் பெருமையைத் தேடித்தருகின்றதெனவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், இலங்கையில் இந்த மண்ணிலேயே வீரத் தமிழன், வீரத் தமிழச்சி வாழ்ந்ததாகவும், வாழ்வதாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here