கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வி: 1000 ரூபா வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் தொழிற்சங்கங்கள்!

தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை பெற்றுக் கொடுப்பது தொடர்பாக இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.

இராஜகிரியவிலுள்ள முதலாளிமார் சம்மேளனத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் இதன்போது தொழிற்சங்கங்களின் 1000 ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பான யோசனைக்கு முதலாளிமார் சம்மேளனத்தினர் இணங்காத நிலையில் பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்டிருந்த தொழிற்சங்கத்தினர் அதிலிருந்து வெளியேறியிருந்தனர்.

அதனை தொடர்ந்து அந்த தொழிற்சங்கத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் நடத்தியுள்ளனர்.

அவர்கள் அனைவரும் கறுப்பு உடையுடனும் மற்றும் கறுப்பு பட்டிகளை அணிந்தவாறுமே பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்டிருந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here