வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பதை பற்றி முடிவெடுக்கவில்லை- சுமந்திரன்!

“அரசியல்கைதிகள் தொடர்பில் மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பில் இணக்கம் ஏற்படாத பட்சத்தில், வரவு செலவு திட்டத்தை எதிர்த்து வாக்களிக்கும் நிலைப்பாட்டில் எமது கட்சியிலுள்ள பலர் இருக்கிறார்கள். எனினும், அதில் உறுதியான முடிவெதும் எட்டப்படவில்லை.

எனினும், எந்தெந்த விடயங்களில் அரசுக்கு நிபந்தனை விதிக்க வேண்டும், எப்படியான காலக்கெடு விதிக்க வேண்டும் என்பதில் தீர்மானம் எடுக்கவில்லை“

இப்படி தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

இன்று யாழில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

 

அரசியல்கைதிகளின் விடுதலை தொடர்பில் வரும் 25ம் திகதி நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு பிரேரணையொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.  மக்கள் விடுதலை முன்னணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து சமர்ப்பிக்கப்படவுள்ளது.

தெற்கில் உள்ளவர்களிற்கு அரசியல் கைதிகள் பற்றி தெளிவுபடுத்தவே அதை செய்வதாக சுமந்திரன் குறிப்பிட்டார்.

அரசியல்கைதிகள் நீண்டகாலம் சிறைவாசமிருந்த பின்னரே விடுவிக்கப்படுகிறார்கள் என்ற விடயம் சிங்கள மக்களிற்கு தெரிய வந்தால், அரசியல்கைதிகள் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார்.

அமைச்சர் மனோ கணேசனுடனோ, விக்னேஸ்வரனுடனோ, சுரேஷ் பிரேமச்சந்திரனுடனோ, கஜேந்திரகுமாருடனோ நான் மோதியதில்லை. நான் விமர்சனங்களை வைத்திருக்கிறேன்.

மனோ கணேசன் என்னுடைய நண்பர். நான் அரசியலுக்கு வர முன்னரேயே அவருடன் இணைந்து பல வேலைகளை செய்துள்ளேன். சென்ற ஜனாதிபதி செயலணி கூட்டத்தில் நான் பேசியதை சரியாக விளங்காமல், என்னை பேச விடாமல் பேசினார். அவரது அமைச்சுக்கு நிதி விடுவிக்கப்படவில்லையென்பதையே நான் சொல்ல முயன்றேன். இறுதியான நான பேசிய போது அதையே குறிப்பிட்டேன்.

அதேநேரம் அமைச்சர்களிற்குள் உள்ள இழுபறியால் மக்களிற்கு வீடு கிடைக்காமல் தாமதிக்ககூடாதென்பதையே சொன்னேன். அமைச்சர்களிற்குள் இழுபறி உள்ளது. அதை யாரும் மறுக்க முடியாது.

இன்றைய சூழலில் யாரையும் வெறுப்பதோ, பகைமை பாராட்டுவதோ எமது நோக்கமல்ல. அண்மைய சம்பவங்களை வைத்து எங்களிற்குள் முரண்பாடு இருப்பதாக காட்டக்கூடாது. நாங்கள் முன்னரை போல இணைந்து வேலை செய்ய தயாராக இருக்கிறோம் என்பதையும் சொல்லி வைக்கிறேன் என்றார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here