பல்கலைகழகத்தின் முன்னால் பற்றியெரிந்தது சொகுசு பஸ்!

பேராதனை பல்கலைக்கழக பொறியபீடத்திற்கு முன்னால் பஸ் ஒன்று நேற்று தீப்பற்றிக்கொண்டது. தலவாக்கலையிலிருந்து கண்டி நோக்கி புறப்பட்ட பேருந்தே இவ்வாறு தீப்பற்றியது.

குறித்த பஸ் கண்டியை நோக்கி மிக வேகமாக சென்றதாகவும், பேராதனை வளாகத்திற்கு அருகிலிருந்து பஸ் நிறுத்துமிடத்தில் நின்ற பிரயாணிகள், பஸ்ஸை நிறுத்த சைகை செய்தபோதும் நிற்காமல் அதி விரைவாக சென்றுள்ளதாக அந்த பகுதியிலுள்ளவர்கள் தெரிவித்தனர்.

தீப்பற்றிய போது பஸ்ஸிற்குள் பிரயாணிகள் இருக்கவில்லை. உடனடியாக பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, தீயணைப்பு வாகனங்கள் கொண்டுவரப்பட்டு தீ கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here