இலங்கையில் இது காப்பாற்றப்பட்டது பிரபாகரனால்தான்: பொதுமேடையில் மைத்திரி புகழாரம்!

0

வடக்கில் அகோர போர் நடந்தாலும், அங்குள்ள காடுகளை விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் காப்பாற்றியிருக்கிறார் என கூறியுள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

கம்பஹா மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனை தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு உரையாற்றும் போது- “இலங்கையிலேயே வடக்கில்தான் வன அடர்த்தி வீதம் அதிகமாக உள்ளது. அங்குதான் 30 ஆண்டுகளாக போர் நடந்தது. அகோரமான போர் நடந்தாலும் அங்குள்ள காடுகளை அழியவிடாமல் பிரபாகரன் பாதுகாத்தார்.

பிள்ளைகளிற்கு பிறந்தநாளுக்கு கேக் வெட்டாமல், மரங்கன்றுகளை நடுங்கள். மரக்கன்றுகளை மற்றவர்களிற்கு வழங்குங்கள்“ என ஜனாதிபதி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here