களுத்துறையில் மக்கள் நீதி மன்றம் ஆரம்பம்!

களுத்துறை மாவட்ட தமிழ் இளைஞர்களை கொண்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள அரசியல் சமூக அமைப்பான “மக்கள் நீதி மன்றம்” தனது அங்குரார்ப்பண கூட்டத்தினை இங்கிரியவில் நேற்று சனிக்கிழமை நடத்தியது.

மன்றத்தின் தலைவராக ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா தெரிவு செய்யப்பட்டார். செயலாளராக கே உதயகுமார் பொருளாளராக செல்வராஜ், உபசெயலாளராக டி.தேவநாதன், தேசிய அமைப்பாளர் எஸ்.விமலனேசன், உபதலைவர் ஏ.பி.சிவபெருமாள், ஊடக செயலாளராக மணி ஸ்ரீகாந்த் ஆகியோரும் நிறைவேற்றுக் குழுவில் 10 பேரும் தெரிவு செய்யப்பட்டனர்.

இயக்கத்தின் மாநாட்டை விரைவில் நடத்தவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here