பாவனாவின் அடுத்த அவதாரம்!

சின்னத்திரையின் நட்சத்திர தொகுப்பாளினி பாவனா. திரைப்படம் தொடர்பான பிரமாண்ட நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குவார். இடையிடையே மியூசிக் ஆல்பமும் வெளியிடுவார். தற்போது பாவனா நடைபெற்றுக் கொண்டிருக்கும் புரோ கபடி போட்டியின் நேரடி வர்ணணையாளர் ஆகியிருக்கிறார்.

இன்று சென்னையில் தொடங்கும் கபடி போட்டியில் பாவனாதான் ஸ்டார் அட்ராக்ஷன். களத்தில் நேரடியாக நின்று கொண்டு வர்ணணை செய்ய இருக்கிறார். அவரது வர்ணணை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டி.வியில் ஒளிபரப்பாகிறது. பாவனாக ஏற்கெனவே ஐபிஎல் கிரிக்கெட் போட்டியையும் வர்ணணை செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் மாஷ்அப் என்ற தனது இரண்டாவது இசை ஆல்பத்தையும் முடித்து விட்டார். அதை விரைவில் யு டியூப்பில் வெளியிடப்போகிறார். பாவனா குறித்து இன்னொரு சர்ப்ரைசும் இருக்கிறது. அவர் ஒரு சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார். விரைவில் அது பற்றிய முறையான அறிவிப்பு வரும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here