கே.பி, கருணாவிற்கு சுதந்திரம்: அவர்களின் கட்டளையை ஏற்றவர்களிற்கு சிறையா?

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக பல்கலைகழக மாணவர்களால் நடத்தப்பட்ட உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக அம்பாறையில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூக மயமாக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து இந்த போராட்டத்தை நடத்தினர். 

அம்பாறை திருக்கோவில் வெட்டுக் குளத்துப் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு மணிக்கூட்டு கோபுரம் வரை பேரணியாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த முன்னாள் போராளி ஒருவர் தனது  அனுபங்களை குறிப்பிட்டார்.

அவர் உரையாற்றும்போது- “படையணியை வழிநடத்தி போராட்டத்தை செய்த கருணா இன்று மன்னிக்கப்பட்டு வெளியில் சுகபோக வாழ்க்கை வாழ்ந்துவரும் நிலையில், அவரின் சொல்கேட்டு யுத்தம் புரிந்தவர்கள் இன்னும் சிறைக் கதவுகளின் பின்னால் வாழ்ந்து வருகின்றனர். அதே போல் யுத்தத்திற்கு தேவையான ஆயுதங்களை அனுப்பி வைத்த கேபி என்ற குமரன் பத்மநாதன் வெளியில் இருக்கின்றார். அரசாங்கமானது இப்படிப் பட்டவர்களை எல்லாம் வெளியில் விட்டு விட்டு இறுதி யுத்த நேரத்தில் இராணுவத்தினதும் அரசாங்கத்தினதும் சொல்லை நம்பி அரசிடம் சரணடைந்த பல போராளிகளை இன்னும் சிறைகளில் வைத்திருக்கிறது“ என்றார்.

இறுதியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 150 பேர் கையெழுத்திட்டு மனித உரிமை குழு மற்றும் ஐ.நா சபைக்கும் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக மகஜர் அனுப்பி தமது போராட்டத்தை நிறைவு செய்துள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here