இங்கு அரசியல் கைதிகள் இல்லை, புலிகளே உள்ளனர்: தகராறில் ஈடுபட்ட சிங்கள ரௌடிகள்!

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி நீண்ட நடைபயணத்தை மேற்கொண்டு அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற பல்கலைகழக மாணவர்களுடன் சிங்கள ரௌடிகள் சிலர் தகராற்றில் ஈடுபட்டனர்.

சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகள் என யாருமில்லை, புலிகளே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என கூறி அவர்கள் தகராறில் ஈடுபட்டனர்.

யாழில் இருந்து அநுராதபுர சிறைச்சாலைக்கு நடைபயணம் மேற்கொண்ட பல்கலை கழக மாணவர்கள் சிறையில் அரசியல் கைதிகளை சந்தித்த பின்னர் சிறைச்சாலை முன்பாக கூடியிருந்த போதே குறித்த தர்க்கம் ஏற்பட்டது.

சிறைச்சாலை முன்பாக பெருமளவான சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள், பொலிஸார் நின்றிருந்த வேளை இரண்டு காரில் மது போதையில் வந்த ஐந்துக்கும் மேற்பட்ட பெரும்பான்மையின இளைஞர்கள் நடைபயணம் வந்த பல்கலை மாணவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

சிறையில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை. இங்கே உள்ளவர்கள் விடுதலைப்புலிகள் என கூறி தகாத வார்த்தைகளை கூறியதுடன், இனவாத கருத்துக்களையும் தெரிவித்து மாணவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

அதன் போது அங்கிருந்தவர்கள் பல்கலை மாணவர்களை சமாளித்து அழைத்து சென்றனர். அதனைத் தொடர்ந்து அங்கு நின்றுருந்த அரசியல் வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்களையும் அந்த ரௌடிகள் அச்சுறுத்தினர்.

இந்த ரௌடிகள், மாணவர்களை அச்சுறுத்திய போது, பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காது வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here